வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 15 மார்ச் 2023 (15:33 IST)

உரிய விளக்கம் அளிக்காவிட்டால் பால் சங்கங்கள் கலைக்கப்படும்: அமைச்சர் நாசர் எச்சரிக்கை..!

minister nassar
அண்டை மாநிலங்களுக்கு பால் கூட்டுறவு சங்கங்கள் பால் விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இது குறித்து உரிய விளக்கம் அளிக்காவிட்டால் பால் கூட்டுறவு சங்கங்கள் கலைக்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் நாசர் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். 
 
இந்த நிலையில் விதிகளை மீறி அண்டை மாநிலங்களுக்கு பால் விற்பனை செய்த கூட்டுறவு சங்கங்களுக்கு தமிழக அரசின் கூட்டுறவு துறை அமைச்சகம் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 
 
அண்டை மாநிலங்களுக்கு பால் விற்பனை செய்த 2000 சங்கங்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உரிய விளக்கம் அளிக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்பட்டு சங்கம் கலைக்கப்படும் என்றும் அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran