1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. minister nassar says about rajendra balaji

ராஜேந்திர பாலாஜி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை உறுதி: அமைச்சர் நாசர் பேட்டி

நாசர்
முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுப்பது உறுதி என பால்வளத்துறை அமைச்சர் நாசர் அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன என்பதும் அவர் மீது ஒரு சில வழக்குகளும் பதிவாகி உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவினில் வேலை வாங்கி தருவதாக பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது இந்த மோசடிக்கு ஆதாரம் இருப்பதாகவும் அவர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுப்பது உறுதி என்றும் பால்வளத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 
அடுத்த கட்டுரையில்
சூர்யாவுக்கு என்றும் துணை நிற்போம்..! – கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை!