1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. minister muthusamy says about vck conference

தமிழக அரசையோ, முதல்வரையோ எதிர்த்து விசிக மதுவிலக்கு மாநாடு நடத்தவில்லை: அமைச்சர் முத்துசாமி

Minister Muthusamy
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கொள்கை அளவில் மதுவிலக்கு மாநாடு நடத்துகிறார்கள் என்றும் தமிழக அரசையும் தமிழக முதல்வரையும் எதிர்த்து அவர்கள் மாநாடு நடத்தவில்லை என்றும்  அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு டாஸ்மாக் கடையை தொடர்ந்து நடத்துவதில் விருப்பமில்லை என்றும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும் என்பதுதான் அவருடைய எண்ணம் என்றும் ஆனால் உடனடியாக அதை செய்தால் எந்த நிலைமை ஏற்படும் என்று அனைவருக்கும் தெரியும் என்றும் கேள்வி ஒன்றுக்கு அமைச்சர் முத்துசாமி பதில் அளித்தார்.

கடுமையான முடிவை எடுக்கும் போது நிதானமாக அணுக வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நோக்கமாக உள்ளது என்றும் ஆனால் நிச்சயமாக ஒரு காலத்தில் மக்களை மதுவில் இருந்து வெளியே கொண்டு வர கடைகளை குறைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கொள்கை ரீதியான மாநாடு நடத்துகிறார்கள் என்றும் அதில் எந்த தவறும் இல்லை என்றும் அவர்கள் அரசாங்கத்தையோ முதல்வரையோ எதிர்த்து மாநாடு நடத்தவில்லை என்றும் அவர் தெரிவித்தார்

Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
நேரடி விவாதத்திற்கு பின் எகிறும் ஆதரவு.. கமலா ஹாரிஸ் வெற்றி உறுதியா?