புதன், 30 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 30 அக்டோபர் 2024 (13:48 IST)

எதற்காக நிவாரணம் தர வேண்டும்? மதுரை எம்பி கோரிக்கைக்கு அமைச்சர் அதிரடி பதில்..!

மதுரையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என மதுரை எம்பி வெங்கடேசன் கோரிக்கை விடுத்த நிலையில், இந்த கோரிக்கைக்கு பதிலளித்த அமைச்சர் மூர்த்தி, "எதற்காக நிவாரணம் வழங்க வேண்டும்?" என்று கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
"மதுரையில் பெரிதாக மழை பெய்ததில் எந்த பாதிப்பும் இல்லை; தேங்கிய மழை நீர் அனைத்தும் அகற்றப்பட்டுவிட்டது. மதுரையில் எங்கு பாதிப்புகள் உள்ளன என்பதை எம்பி வெங்கடேசனே கூற வேண்டும். எதற்காக நிவாரணம் வழங்க வேண்டும்?" என்றும் அமைச்சர் மூர்த்தி கேள்வி எழுப்பினார். 
 
மேலும் "செல்லூர் கண்மாயிலிருந்து வைகை ஆற்றுக்குப் புதிதாக அமைக்கப்பட்ட வாய்க்கால் நிரந்தர வாய்க்காலாக மாற்றுவதற்கு 11 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதோடு, மற்ற பகுதிகளிலும் வாய்க்கால்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றும் அவர் தெரிவித்தார்.
 
மேலும், மதுரைக்கு வரவிருக்கும் முதல்வரிடம், அப்பகுதி ஆட்சியரும் ஆணையரும் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து மற்றும் அதற்கெடுத்த நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கூட்டணி கட்சி எம்.பி.யின் கோரிக்கைக்கு அமைச்சர் மூர்த்தி கூறிய பதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
Edited by Mahendran