வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 7 ஆகஸ்ட் 2022 (09:02 IST)

விரைவில் நீட் விலக்கு கிடைக்கும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

NEET
விரைவில் தமிழகத்திற்கு நீட் விலக்கு கிடைக்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் அவர்கள் இன்று பேட்டி அளித்த போது தெரிவித்துள்ளார்.
 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மருத்துவ கல்விக்காக நீட் என்ற நுழைவுத்தேர்வு நடைபெற்று வருகிறது என்பதும் தமிழகம் தவிர அனைத்து மாநிலங்களும் நீட் தேர்வை ஆதரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
தமிழகத்திலும் கூட அரசியல்வாதிகள் மட்டுமே நீட் தேர்வை எதிர்த்து வருவதாகவும் மாணவர்கள் ஆசிரியர்கள் கல்வியாளர்கள் நீட் தேர்வுக்கு ஆதரவு தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் நீட் தேர்வு விலக்கு குறித்த நடவடிக்கை எடுத்துவரும் தமிழக அரசு விரைவில் நீட் விலக்கு கிடைக்கும் என அமைச்சர் சுப்பிரமணியன் இன்று அளித்த பேட்டியில் கூறியுள்ளார் 
 
நீட் விலக்கு விவகாரம் சாதுர்யமாக கையாளப்பட்டு வருகிறது என்றும் விரைவில் தமிழகத்திற்கு  நீட் விலக்கு கிடைக்கும் என்று நம்புவோம் என்றும் அவர் இன்று அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அவர் கூறியவாறே தமிழகத்திற்கு நீட் விலக்கு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.