புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 23 ஜூன் 2023 (13:04 IST)

மத்திய அரசு செய்யாவிட்டால் தமிழ்நாடு அரசே எய்ம்ஸ் பணிகளை தொடங்கும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மதுரை எய்ம்ஸ் கட்டுமானத்திற்கு நிதி வழங்கும் ஜப்பான் நிறுவனத்தின் (JICA) துணை தலைவரை சந்தித்தோம். இதன் டெண்டர் 2024க்குள் முடித்து, 2028ல் இறுதியாகும் என தெரிவித்தார்
 
மத்திய அரசு போதுமான முயற்சி மேற்கொள்ளாவிடில், JICA அமைப்பின் மூலம் நிதிபெற்று தமிழ்நாடு அரசே பணிகளை தொடங்கவும் திட்டமிட்டு உள்ளோம்
 
மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுப்பார்கள் என்ற எண்ணத்தில்தான், மதுரை எய்ம்ஸ் கல்லூரியை ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடத்தி  ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கையை நடத்தி வருகிறோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். 
 
மேலும் மதுரை திருமங்கலத்தில் உள்ள அரசு ஹோமியோபதி கல்லூரி தோப்பூருக்கு மாற்றப்பட உள்ளது. 5 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஒதுக்கப்பட்ட இடத்தின் அருகே ஹோமியோபதி கல்லூரி கட்டப்பட உள்ளது. ஓராண்டுக்குள் இதற்கான பணிகள் தொடங்கும்  என மதுரையில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
 
Edited by Mahendran