1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 11 ஏப்ரல் 2023 (13:00 IST)

தமிழ்நாட்டில் 4வது கொரோனா அலையா? அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இது நான்காவது கொரோனா அலையா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பதில் கூறிய தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் நான்காவது கொரோனா அலை என்று கூற முடியாது என்று தெரிவித்துள்ளார். 
 
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்தாலும் கொரோனா பரவல் தீவிரமாக இல்லை என்றும் அதனால் பெரிய அளவிலான பதட்டமான சூழ்நிலை இல்லை என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 
 
கொரோனா பாதிப்பு தன்மை வீரியமாக இல்லை என்பதால் தற்போதைய நிலையை 4வது கொரோனா அலையாக கருத இயலாது என்று தெரிவித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் மாஸ்க் அணிதல், தனிமனித இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
 
 
Edited by Mahendran