1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: வியாழன், 21 டிசம்பர் 2023 (19:40 IST)

108 திவ்ய தேசங்களில் ஒன்று.. மயிலாடுதுறை அருகேயுள்ள திருவிழந்தூர்..!

108 திவ்ய பிரதேசங்களில் ஒன்றான மயிலாடுதுறை அருகே இருக்கும் திருவிழந்தூர் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை வருகின்றனர். 
 
திரு இந்தளூர் என்ற புராண பெயர் தான் காலப்போக்கில் மருவி திருவிழந்தூர் என்று ஆகிவிட்டது.  108 திவ்ய பிரதேசங்களில் ஒன்றான இந்த கோயில் ஆகம விதிகளை படி கட்டப்பட்டது என்பதும் நறுமணம் வீசும் புஷ்ப காடுகள் நிறைந்திருக்கும் சுகந்தவனம் என்ற பெயரும் இதற்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த கோவிலில் வைகாசி மாதத்தில் தேர்த்திருவிழா நடைபெறும் என்பதும் பங்குனி மாதத்தில் பிரம்மோற்சவம் செய்தபடியால்  இன்றும் பங்குனியில் பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. 
 
ஐப்பசி மாதத்தில் இங்கு உள்ள காவிரி நதியில் நீராடினால் கங்கையில் நீராடிய புண்ணியம் கிடைக்கும் என்று வரலாறு கூறுகிறது
 
Edited by Mahendran