ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 9 செப்டம்பர் 2020 (20:52 IST)

இந்தி தெரியாது போடா: டீசர்ட் பின்னணியில் கனிமொழி மற்றும் திமுக நிர்வாகி

இந்தி தெரியாது போடா: டீசர்ட் பின்னணியில் கனிமொழி மற்றும் திமுக நிர்வாகி
ஹிந்தி பெரியாறு போடா’ டீசர்ட் வைரல் பின்னணியில் திமுக எம்பி கனிமொழி மற்றும் திமுக நிர்வாகி இருப்பது தற்போது தெரிய வந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா உள்பட ஒருசில திரை நட்சத்திரங்கள் திடீரென இந்தி தெரியாது போடா மற்றும் ஐ எம் எ தமிழ் பேசும் இந்தியன்’ போன்ற வாசகங்கள் அடங்கிய டிசர்ட்களை அணிந்து பரபரப்பை ஏற்படுத்தினார்கள்
 
இந்நிலையில் இந்த டீசரை டிசைன் செய்து உற்பத்தி செய்த செய்தவர் திமுகவை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. திருப்பூர் மாவட்ட திமுக மாணவரணி துணை அமைப்பாளர் ஆக இருக்கும் திருப்பூர் வீரபாண்டி பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் சமீபத்தில் பேட்டியளித்த போது தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தான் இந்த டீசர்ட்டை தனக்கு ஆர்டர் கொடுத்ததாகவும் 1500 டீசர்ட்களை அவர் ஆர்டர் கொடுத்ததாகவும் அதனை திரையுலக பிரபலங்கள் அணிந்ததால் இந்த டீசர்ட்டுகள் தற்போது மிகப்பெரிய அளவில் வைரலானது என்றும் இதனை அடுத்து தங்களுக்கு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டீ சர்ட்ட்டுக்கள் ஆர்டர் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
எனவே கடந்த இரண்டு நாட்களாக ட்ரெண்டான இந்த டீசர்ட்டுக்கு மூல காரணம் திமுக எம்பி கனிமொழி மற்றும் திமுக நிர்வாகி தான் என்பது தற்போது தெரியவந்துள்ளது