1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 9 ஜூலை 2018 (20:57 IST)

பெரிய மாளிகையில் சின்ன பல்ப் இல்லை: ஸ்டாலினை விமர்சித்த ஜெயகுமார்!

இன்று சட்டசபை ஒருமனதாக லோக் ஆயுக்தா மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால், எதிர்கட்சி தலைவரும், திமுகவின் செயல் தலைவருமான ஸ்டாலின் லோக் ஆயுக்தாவை எதிர்த்தது, திமுக வெளிநடப்பு செய்தது.
 
ஊழல் செய்யும் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் என அனைவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர வழி வகை செய்யும் மசோதாதான் லோக் ஆயுக்தா. இன்று லோக் அயூக்தா மசோதா நிறைவேற்றப்பட்டது. 
 
இந்நிலையில், சட்டசபை முடிந்த பின்னர் அமைச்சர் ஜெயகுமார் ஸ்டாலின் வெளிநடப்பு செய்தது குறித்து பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியது பின்வருமாறு, லோக் ஆயுக்தவை கொண்டு வர சொன்னதே திமுகதான். ஆனால் இன்று அதை எதிர்த்து விட்டு வெளிநடப்பு செய்கிறார்கள்.
 
வரலாற்று சிறப்பு மிக்க லோக் ஆயுக்தா சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. ஆனால், பெரிய மாளிகையில் சிறிய பல்பு இல்லை என்பது போல் திமுக குறை கூறுகின்றது. ஊழலை ஒழிப்பதற்கான எண்ணம் திமுகவுக்கு துளியும் இல்லை. 
 
எல்லாவற்றிலும் ஊழல் செய்த கட்சி திமுக. அக்கட்சிக்கு லோக் ஆயுக்தாவால் பயம், அதனால்தான் தேர்வுக் குழுவுக்கு அனுப்புமாறு கூறுகின்றனர். தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பு லோக் ஆயுக்தா. ஊழல் எதிர்ப்பு என்ற நிலை திமுகவிடம் இல்லை என ஸ்டாலின் செயலை விமர்சனம் செய்தார்.