1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 8 அக்டோபர் 2020 (12:08 IST)

நடுவானில் திடீரென பிறந்த குழந்தை! – இண்டிகோ நிறுவனம் வழங்கிய பரிசு!

பெங்களூரிலிருந்து இண்டிகோ விமானத்தில் பயணித்த பெண் ஒருவர் நடுவானில் குழந்தை பெற்ற சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று பெங்களூரிலிருந்து டெல்லிக்கு புறப்பட்ட இண்டிகோ 6 இ 122 என்ற விமானத்தில் பெண் ஒருவர் பயணித்துள்ளார். நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்தபோது திடீரென அந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக விமானத்தில் இருந்த பணி பெண்களும், மருத்துவ குழுவும் உதவ விமானத்திலேயே அந்த பெண் ஒரு ஆண் குழந்தையை பெற்றுள்ளார்.

பிறகு விமானம் தரையிறங்கியதும் அவர்கள் பத்திரமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் நடுவானில் தங்கள் விமானத்தில் பிறந்த அந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இண்டிகோ விமானத்தில் இலவசமாக பயணிக்க இலவச டிக்கெட்டை அறிவித்துள்ளது இண்டிகோ நிறுவனம்.