வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 24 ஜூலை 2021 (10:41 IST)

ப்ளீச்சிங் பவுடர் சாப்பிட்ட குழந்தை; எம்.எல்.ஏ விடுதியை அளித்த மா.சுப்ரமணியன்!

ப்ளீச்சிங் பவுடரை சாப்பிட்ட குழந்தை சிகிச்சைக்காக சென்னையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தங்கி கொள்ள எம்.எல்.ஏ விடுதியை அளித்துள்ளார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

சமீபத்தில் இசக்கியம்மாள் என்ற சிறுமி தெரியாமல் ப்ளீச்சிங் பவுடரை சாப்பிட்டதால் உடல்நல கோளாறு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த செய்தி வைரலான நிலையில் அதிகாரிகள் தலையீட்டின் பேரில் குழந்தை சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள மருத்துவ மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் “பிளீச்சிங் பவுடர் உட்கொண்டதால் பாதிக்கப்பட்ட குழந்தை இசக்கியம்மாளுக்கு வயிற்றை துளையிட்டு உணவு வழங்கும் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஒரு மாதம் சென்னையில் இருந்து சிகிச்சை எடுக்க வேண்டிய காரணத்தால் என்னுடைய எம்.எல்.ஏ விடுதியில் அவர்களை தங்கக் கூறியுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.