செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 24 ஜூலை 2021 (09:28 IST)

சென்னை டூ நாகை; பயணிகள் கப்பல் சேவை! – துறைமுக பொறுப்புக்கழக தலைவர் தகவல்!

சென்னையிலிருந்து மற்ற கடற்கரை மாவட்டங்களுக்கு பயணிகள் கப்பல் சேவை தொடங்கும் திட்டமுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கோப்புப்படம்

சென்னையிலிருந்து அந்தமான் தீவு உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணிகள் கப்பல் சேவை உள்ளது. இந்நிலையில் பயணிகள் கப்பல் சேவையை அதிகரிக்கும் விதமாக சென்னை துறைமுகத்திலிருந்து பிற மாவட்ட துறைமுகங்களுக்கு பயணிகள் கப்பல் சேவை தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள சென்னை துறைமுக பொறுப்புக்கழக தலைவர் “சென்னை துறைமுகத்திலிருந்து கடலூர், நாகை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணிகள் கப்பல் சேவை விரைவில் தொடங்க உள்ளது. விரைவில் நிறுவனங்களை இறுதி செய்து போக்குவரத்து தொடங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.