பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா "வரும் ஆனா வராது": அமைச்சர் கீதா ஜீவன்
பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா வரும் ஆனால் வராது என்று அமைச்சர் கீதா ஜீவன் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு மசோதா கொண்டுவரப்பட்டது. ஆனால் இந்த மசோதா 2029 ஆம் ஆண்டு தான் நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் கோவில்பட்டியில் அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி அளித்த போது கூறியதாவது: பாஜக அரசு தேர்தலுக்காக 33% பெண்கள் இட ஒதுக்கீட்டை கொண்டு வந்துள்ளது. வந்தால் மகிழ்ச்சிகரமான விஷயம் தான், ஆனால் இதனை தேர்தலுக்காக செய்கின்றனர் என்று அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி அளித்துள்ளார்.
Edited by Mahendran