திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 22 பிப்ரவரி 2024 (13:03 IST)

தமிழ்நாட்டின் அனுமதியின்றி மேகதாதுவில் ஒரு செங்கல்கூட வைக்க முடியாது.. அமைச்சர் துரைமுருகன்

தமிழ்நாட்டின் அனுமதியின்றி மேகதாதுவில் ஒரு செங்கல் கூட வைக்க முடியாது என்றும் கர்நாடக மாநில அரசியல்வாதிகள் நிதி ஒதுக்கினாலும் ஆவேசமாகவும் பேசினாலும் அச்சப்படத் தேவையில்லை என்றும் சட்டப்பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்தார் 
 
சமீபத்தில் கர்நாடக மாநில பட்ஜெட் தாக்கல் செய்தபோது அதில் மேகதாதுவில் அணை கட்ட நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் இது குறித்து இன்று சட்டமன்றத்தில் கேள்வி கேட்கப்பட்டது. 
 
இதற்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலளித்தபோது, ‘தமிழ்நாட்டின் அனுமதியின்றி மேகதாதுவில் ஒரு செங்கல் கூட வைக்க முடியாது என்றும் இந்த விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் உள்ளதால் அதை மீறி மேகதாது அணையை கர்நாடக அரசால் கட்ட முடியாது என்றும் எனவே கர்நாடக அரசியல்வாதிகள் நிதி ஒதுக்கியதையோ அல்லது ஆவேசமாக பேசுவதையோ கருத்தில் கொண்டு அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்தார். 
 
அமைச்சர் துரைமுருகனின் விளக்கம் எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது
 
Edited by Mahendran