1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 7 ஏப்ரல் 2023 (08:56 IST)

சூர்யா 42 பட டைட்டில் அறிவிப்பு எப்போ? வெளியான தகவல்!

நடிகர் சூர்யா, தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் தலைப்பு இன்னும் அறிவிக்கப் படவில்லை.இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கோவாவில் முடிவடைந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் படத்துகு ‘வீர்’ என்று தலைப்பு வைக்க இயக்குனர் சிவா ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படம் 10 மொழிகளில் வெளியாவதால் எல்லா மொழிக்கும் பொறுத்தமான தலைப்பாக இருக்க இந்த தலைப்பை வைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படம் பற்றி பேசியுள்ள ஸ்டுடியோ கிரீன் நிறுவன தலைமை செயல் அதிகாரி தனஞ்செயன் “இந்த படம் மொத்தமாக 180 நாட்கள் ஷூட்டிங் என்று சிறுத்தை சிவா சார் சொன்னபோது அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் அதற்கான காரணம் இந்த கதையில் உள்ளது. பிளாஷ்பேக் காட்சிகள் மட்டுமே 60 முதல் 80 நாட்கள் வரை செல்லும்” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி ஏப்ரல் 16 ஆம் தேதி காலை 9 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.