வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 13 ஜூலை 2024 (15:17 IST)

அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நல குறைவு.! மருத்துவமனையில் அனுமதி..!

தி.மு.க. பொதுச் செயலாளர்  துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.  திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். ஏறக்குறைய திமுக அங்கு வெற்றி பெறும் நிலையில் இருப்பதால், சென்னை அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகள் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். 
 
முன்னதாக, திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் அறிவாலயத்துக்கு வருகை புரிந்தார். இந்த நிலையில் அமைச்சர் துரைமுருகன் முதல்வரை சந்தித்து வாழ்த்து சொல்ல அறிவாலயத்துக்கு வந்தார். அப்போது, அவருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. உடனே எம்எல்ஏ-வும், மருத்துவருமான எழிலன் அமைச்சர் துரைமுருகனுக்கு முதலுதவி செய்தார்.


அதன் பின்னர் துரைமுருகனை சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். முதற்கட்ட தகவலின்படி, ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்ததால் துரைமுருகன் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.