1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. minister duraimurugan admit in hospital

அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி!

duraimurugan
தமிழக அமைச்சர் மற்றும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளன. 
 
தமிழக நீர்வளத் துறை அமைச்சரும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
நேற்று நள்ளிரவு சுமார் 1.30 மணி அளவில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளதாகவும் சிகிச்சை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன
 
தற்போது துரைமுருகன் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவர் அவர் தொடர்ந்து மருத்துவரின் கண்காணிப்பில் இருக்கிறார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறியுள்ளன.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
‘த்ரிஷ்யம்’ படம் பார்த்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்த சகோதரர்கள்!