1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Annamalai says about pongal gift

இது பொங்கல் பரிசு தொகுப்பு அல்ல, பொங்கல் பொய் தொகுப்பு: அண்ணாமலை

Annamalai
மக்களை ஏமாற்றி விவசாயிகளை வஞ்சித்து இந்த திறனற்ற திமுக அரசு வழங்க இருப்பது பொங்கல் பரிசு தொகுப்பு அல்ல பொங்கல் பொய் தொகுப்பு என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
அவர் தனது டுவிட்டரில் சென்ற ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு என்ற பெயரில் கெட்டுப்போன வெல்லம், பல்லி இருந்த புளி ஆகியவை வழங்கி சாதனை புரிந்தது இந்த திமுக அரசு என்றும் இந்த ஆண்டு மக்களின் ஆரோக்கிய நலனை கருத்தில் கொண்டு சென்ற வருடம் வழங்கப்பட்ட தரமற்ற பொங்கல் பரிசு இந்த ஆண்டு தவிர்த்தமைக்கு பொது மக்களின் சார்பாக நன்றி என்றும் தெரிவித்துள்ளார் 
 
மேலும் ஆட்சிக்கு வருவதற்கு முன் பொங்கல் பரிசாக 5000 ரூபாய் வழங்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கிய முக ஸ்டாலின் இன்று அந்த வாக்குறுதியை மறந்து விட்டு ஆயிரம் ரூபாய் மட்டுமே பொங்கல் பரிசாக கொடுக்கிறார் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
 
 பனை வெல்லம் மற்றும் பனைப் பொருள்களை நியாயவிலை கடைகளில் விநியோகம் செய்வோம் என்ற அறிவிப்பை மட்டுமே கொடுத்துவிட்டு ஒரு வருடமாக திமுக அரசு உறங்கிக் கொண்டிருக்கிறது என்றும் அவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
ஜனவரி 5ஆம் தேதி தான் பள்ளி திறப்பு.. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!