1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 1 நவம்பர் 2020 (08:52 IST)

சொந்த ஊருக்கு புறப்பட்டது அமைச்சர் துரைக்கண்ணு உடல்: இன்று இறுதிச்சடங்கு!

சொந்த ஊருக்கு புறப்பட்டது அமைச்சர் துரைக்கண்ணு உடல்
தமிழக வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு அவர்கள் கடந்த மாதம் 14ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் நேற்று இரவு அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்
 
இதனை அடுத்து அவரது படத்திற்கு முதல்வர் உட்பட அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அமைச்சர் அமைச்சர் துரைக்கண்ணு உடல் சென்னையில் இருந்து அவரது சொந்த ஊரான ராஜகிரிக்கு சற்றுமுன் புறப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள ராஜகிரி என்ற பகுதியில் அமைச்சரின் உடலுக்கு இன்று இறுதி சடங்கு நடைபெற உள்ளதாகவும் இந்த இறுதிச் சடங்கில் அவரது குடும்பத்தினர் மட்டும் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
அமைச்சர் துரைக்கண்ணு அவர்கள் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மரணமாகி உள்ளதால் பொதுமக்கள் அஞ்சலிக்கு அனுமதிக்கப்பட மாட்டாது என்று செய்திகள் வெளியாகிஉள்ளது