1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 12 ஆகஸ்ட் 2019 (14:09 IST)

விபத்தில் சிக்கிய பெண்ணுக்கு அமைச்சர் உதவி ...

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் விஜய பாஸ்கர், நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர் சென்னை  செல்வற்காக விமான நிலையத்திற்கு பாதுகாப்பு வாகனங்களுடன் சென்று கொண்டிருந்தார்.
அப்போது கீரனூர் அருகே உள்ள இளையாவயல் என்ற பகுதியில் அமைச்சர் காரில் வந்துகொண்டிருந்த போது, அங்கு சாலை விபத்தில் சகாயராஜ் - மேரி தம்பதியர் சிக்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தனர். இதில் மேரிக்கு மூக்கில் ரத்தம் கொட்டிக்கொண்டிருந்தது. சகாயராஜுக்கு கையில் காயத்துடன் தப்பினார்.

இதைப் பார்த்த அமைச்சர் விஜய பாஸ்கர், தனது காரை நிறுத்தி, மயங்கிய நிலையில் இருந்த மேரி மற்றும் சகாயராஜுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். பின்னர் 108 ஆம்புலன்ஸுக்கு காத்திருக்காமல் தனது  வாகனத்தில் கீரனூர் அரசு மருத்துவமனைக்கு அவர்களை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்.
 
மேலும் இதுகுறித்து கீரனூர் அரசு மருத்துவமனைக்கு தகவல் கொடுத்த அமைச்சர், உடனடி சிகிச்சை அளிக்கவும் பரிந்துரை செய்தார். அமைச்சரின் இந்த செயலை அனைவரும் பாராட்டினர் .