வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 9 ஏப்ரல் 2024 (11:18 IST)

மடிப்பிச்சை எடுத்தாவது மீனவர்களுக்கு நிதியுதவி செய்வோம்: அனிதா ராதாகிருஷ்ணன்

மடிப்பிச்சை எடுத்தாவது மீனவர்களுக்கு நிதி உதவி செய்வோம் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசியுள்ளார்.

ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ் கனியை ஆதரித்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசிய போது ’அமைச்சர் ராஜகண்ணப்பண்ணால் ஒரு லட்சம் பேருக்கு மேல் பயனடைந்து இருப்பார்கள் என்றும் ஆனால் ஓபிஎஸ் மூலம் ஒருவராது பயன் அடைந்ததாக சொல்ல முடியுமா என்றும் தெரிவித்தார்

இலங்கை கடற்படையினரிடம் மீனவர்கள் இழந்த படகுகளை மீட்கவும் நிவாரணம் தரவும் மத்தியில் புதிய ஆட்சி ஏற்பாடு செய்யும் என்றும் அவர் தெரிவித்தார். நானும் அமைச்சர் ராஜகண்ணப்பனும் இந்த தொகுதியில் எம்எல்ஏ காதர் பாட்ஷாவும் சேர்ந்து மடிப்பிச்சை எடுத்தாவது மீனவர்களுக்கு நிவாரண நிதியை பெற்று தருவோம் என்றும் அவர் கூறினார்

இலங்கை அரசு பிடித்து வைத்துள்ள மீனவர்களின் படகுகளை மீட்டு தருவோம் என்றும் மீட்க முடியாவிட்டால் நிவாரணம் தருவோம் என்றும் மீனவர்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுப்போம் என்றும் டீசல் விலையை குறைக்கவும், மானிய விலையில் டீசல் வழங்கவும் நடவடிக்கை எடுப்போம் என்றும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசினார்.

Edited by Mahendran