ஆன்லைன் வகுப்புகளும் வேண்டாம்: பள்ளி நிர்வாகங்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள்..!
கனமழை காரணமாக ஒரு சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த மாவட்டங்களில் ஆன்லைன் வகுப்புகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கனமழை காரணமாக மாணவர்கள் தொழில்நுட்ப சிக்கலை எதிர்கொள்ள வேண்டிய நிலை இருக்கும் என்பதால் ஆன்லைன் வகுப்புகளும் வேண்டாம் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறி இருப்பதாவது:
கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில்
மாணவர்களுக்கான இணையவழி வகுப்புகளையும் (Online Classes) ஒத்தி வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
கனமழை மற்றும் தீவிரக் காற்று வீசும் சூழ்நிலையில் மாணவர்கள் தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம்.
ஆகையால் கனமழை முடியும் வரை ஆன்லைன் வகுப்புகளைத் தவிர்க்க வேண்டும் என அனைத்துப் பள்ளி நிர்வாகங்களையும் கேட்டுக்கொள்கிறேன்.
Edited by Mahendran