1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 29 செப்டம்பர் 2021 (19:23 IST)

பள்ளி மாணவர்களுக்கு தேர்வு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் எப்போது நடத்துவது என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் பதில் கூறியுள்ளார். 
 
செப்டம்பர் 1 முதல் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன என்பது தெரிந்ததே. அதேபோல் நவம்பர் 1 முதல் 1ஆம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்க உள்ளன 
 
இந்த நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது குறித்து தற்போது எதுவும் ஆலோசனை செய்யவில்லை என்றும் மாணவர்களின் மனநிலையை புரிந்து கொண்ட பின்னரே தேர்வு குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் கூறியுள்ளார்.
 
இந்த ஆண்டு 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு இந்த ஆண்டு கண்டிப்பாக பொதுத்தேர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் மற்ற மாணவர்களுக்கு தேர்வு இருக்குமா அல்லது ஆல்பாஸ் செய்யப்படுவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.