1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 10 ஜூன் 2023 (10:52 IST)

சனிக்கிழமைகளில் வகுப்புகள் எடுக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

இந்த ஆண்டு வழக்கத்தை விட தாமதமாக பள்ளிகள் திறக்கப்படுவதால் சனிக்கிழமைகளில் வகுப்புகள் எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 
 
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் ஒன்றாம் தேதி திறக்கப்படும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் கோடை வெயில் கொளுத்தி வருவதால் பள்ளிகள் திறப்பது ஒத்திவைக்கப்பட்டது. 
 
ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஜூன் 14ஆம் தேதியும் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரைவிலான மாணவர்களுக்கு ஜூன் 12-ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
 
 இந்த நிலையில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் வரும் கல்வி ஆண்டில், மாணவர்களுக்கு பாடச் சுமைகள் இல்லாதவாறும், ஆசிரியர்களுக்கு பணிச்சுமை ஏற்படாத வகையில், மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் வகுப்புகள் எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 
 
Edited by Mahendran