செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 5 ஜூன் 2023 (10:32 IST)

7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா? இன்னும் சற்று நேரத்தில் முதல்வருடன் அமைச்சர் ஆலோசனை..!

ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வெயிலின் தாக்கம் இன்னும் குறையாததால் பள்ளிகள் திறப்பதை ஒத்தி வைப்பது குறித்து ஆலோசனை செய்ய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்னும் சற்று நேரத்தில் சந்தித்து ஆலோசனை செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. 
 
ஜூன் ஒன்றாம் தேதி கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் ஜூன் ஏழாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 
 
ஆனால் இன்னும் வெயிலின் தாக்கம் குறையவில்லை என்பதால் பள்ளிகள் திறப்பதை ஒத்திவைக்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 
 
இதனை அடுத்து தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் உடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்னும் சற்று நேரத்தில் ஆலோசனை செய்ய உள்ளார். 
 
கோடை வெயில் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் நிலையில் பள்ளிகள் திறப்பது மீண்டும் ஒத்தி வைக்கப்படுமா என்று இன்னும் ஒரு சில மணி நேரத்தில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran