திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 3 ஜூன் 2021 (10:44 IST)

பணத்தை கொடுக்காமல் இறந்தவர் உடலை தர முடியாது! – முரண்டு பிடித்த மருத்துவமனைக்கு எச்சரிக்கை!

கோவையில் கொரோனாவால் இறந்தவர் உடலை தராமல் முரண்டு பிடித்த தனியார் மருத்துவமனைக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் காதர். சமீபத்தில் இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். கடந்த 20 நாட்களாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் 20 லட்ச ரூபாயை கட்டணமாக மருத்துவமனை விதித்துள்ளது.

காதரின் குடும்பத்தால் 16 லட்சம் கட்டியிருந்த நிலையில் காதர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் காதரின் உடலை மீதம் செலுத்த வேண்டிய ரூ.4 லட்சத்தை செலுத்தினால்தான் தருவோம் என மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. இதுகுறித்து சிறப்பு ஐஏஎஸ் அதிகாரி சித்திக் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திடம் காதர் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்.

அதன்பேரில் நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் மருத்துவமனை அரசின் விதிகளை மீறி அதிக கட்டணம் வசூலித்ததை கண்டித்து எச்சரித்ததுடன் காதரின் உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளனர்.