மனைவி இறந்த சோகம்! ட்ரான்ஸ்ஃபார்மரில் கை வைத்த ராணுவ வீரர் – பதற செய்யும் வீடியோ!
மதுரையில் மனைவி இறந்த சோகத்தால் ராணுவ வீரர் ட்ரான்ஸ்ஃபார்மரில் கை வைத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையை சேர்ந்த ராணுவ வீரர் சக்தி. இவருக்கும் நிலக்கோட்டை பகுதியை சேர்ந்த தேனிஷா என்ற பெண்ணுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. அதற்கு பிறகு சக்தி ராணுவ பணிகளுக்காக சென்று விட்ட பிறகு, சக்தியின் பெற்றோர் தேனிஷாவுக்கு வரதட்சனை கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சக்தி மனைவியை பார்க்க ஊர் திரும்பிய நிலையில் தேனிஷா தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்த விசாரனைக்காக சக்தி ஆர்டிஓ அலுவலகம் சென்றுள்ளார். தன் மனைவி தற்கொலை செய்து கொண்டதை நினைத்து மீளா துயரில் இருந்த சக்தி அருகில் இருந்த ட்ரான்ஸ்ஃபார்மரில் ஏறி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.ச் மின்சாரம் தாக்கு சரிந்து விழுந்த சக்தியை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு அவசர பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் மதுரை பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.