நெல்லை, கூடங்குளம் பகுதியில் லேசான நில அதிர்வு: பெரும் பரபரப்பு
திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக அங்குள்ள பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்
திருநெல்வேலி மாவட்டத்திலும் கன்னியாகுமரி மாவட்டத்திலும் உள்ள கூடங்குளம், பெருமணல், காவல்கிணறு, பணகுடி, வள்ளியூர் ஆகிய பகுதிகளிலும் அதன் சுற்று வட்டாரத்திலும் லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர்
இருப்பினும் சுனாமி குறித்த எந்தவித அச்சமும் இல்லை என்று கூறப்படுகிறது. கடலோரப் பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் லேசான அச்சம் கொண்டுள்ளனர் என்றும் ஆனால் தற்போது நிலைமை அங்கு இயல்பு நிலை திரும்பி உள்ளது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன
நெல்லை குமரி மாவட்டங்களில் திடீரென லேசான நில அதிர்வு ஏற்பட்டதால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது