1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 23 ஜூன் 2017 (16:06 IST)

மன்னார்குடி மாபியாவின் எடுபிடி, கைக்கூலி: திண்டுக்கல் சீனிவாசனுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

மன்னார்குடி மாபியாவின் எடுபிடி, கைக்கூலி: திண்டுக்கல் சீனிவாசனுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

மறைந்த முன்னாள் முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்ஜிஆரை மற்ற மாநிலத்தவருக்கு தெரியாது என சர்ச்சை கருத்து கூறிய அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு அதிமுகவில் எதிர்ப்புகள் வலுக்கிறது.


 
 
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அடுத்த வருடம் ஜனவரி வரை தமிழக அரசு சார்பில் கொண்டாடப்பட உள்ளது. இதன் முதல் விழா மதுரையில் ஜூன் 30-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்கான கால்கோள் விழா நேற்று முன்தினம் அதிகாலை 5.30 மணிக்கு நடந்தது.
 
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் நிரூபர் ஒருவர் இந்த விழாவுக்கு வெளிமாநில முதல்வர்களை அழைப்பீர்களா என கேள்வி எழுப்பினார். ஆனால் அதற்கு கொஞ்சமும் யோசிக்காமல் தம்பி அவுங்கள்ள யாருக்கு எம்ஜிஆரை பற்றி தெரியும் என்றார்.
 
அதாவது எம்ஜிஆரை இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில் யாருக்கும் தெரியாது எம்ஜிஆர் அவ்வளவு பிரபலமானவர் இல்லை என்கிற ரீதியில் அமைந்தது அவரது பதில். திண்டுக்கல் சீனிவாசனின் இந்த பதிலை அருகில் நின்ற அமைச்சர்கள் கூட எதிர்பார்க்கவில்லை.
 
திண்டுக்கல் சீனிவாசனின் இந்த கருத்துக்கு ஓபிஎஸ் அணியில் உள்ள பி.எச்.பாண்டியன் கடுமையான கண்டனத்தை தெரிவித்தார். மேலும் அவரை பதவி நீக்கம் செய்யவும் வலியுறுத்தினார். இந்நிலையில் வட சென்னை மாவட்ட எம்ஜிஆர் மன்ற முன்னாள் செயலாளரும், எம்ஜிஆரின் பாதுகாவலாரக இருந்தவருமான ஓம்பொடி பிரசாத் திண்டுக்கல் சீனிவாசனை கடுமையாக சாடியுள்ளார்.
 
இது தொடர்பாக ஓம்பொடி பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், மன்னார்குடி மாபியாவின் எடுபிடி, கைக்கூலி, கழகம் பெற்ற முதல் வெற்றி கனி பறித்த திண்டுக்கல்லில் பிறந்து, அமைச்சராகி, புரட்சி தலைவரை வெளிமாநில மக்களுக்கு எம்ஜிஆரை தெரியாது என கூறிய நரகர் நக்கி, திண்டுக்கல் சீனிவாசனை அனைத்து எம்ஜிஆர் மற்ற தோழர்கள், பக்தர்கள், கழக உறுப்பினர்கள் சார்பாக மிகவும் கடுமையாக கண்டிக்கிறோம் என கூறியுள்ளார்.