1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. metro train extended to kilambakkam

கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் சேவை: உயர்மட்ட குழு ஒப்புதல்!

metro
சென்னையில் புதிதாக அமையவிருக்கும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ ரயில் நீடிக்க உயர் மட்ட குழு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
சென்னை விமான நிலையம் வரை தற்போது மெட்ரோ ரயில் தடம் இருக்கும் நிலையில் அதை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை நீடிக்க தலைமைச் செயலாளர் தலைமையிலான உயர்மட்ட குழு ஒப்புதல் அளித்துள்ளது. 
 
158 கிலோ மீட்டர் நீளம் மற்றும் 12 உயர்மட்ட ரயில் நிலையங்களுடன் இந்த மெட்ரோ ரயில் பாதை அமைய இருக்கிறது. இந்த தகவலை தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
ஜனவரி 26 குடியரசு தினத்தன்று சென்னை புறநகர் ரயில் அட்டவணையில் மாற்றம்!