வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 18 ஜனவரி 2023 (16:38 IST)

ரயில் நிலையத்தில் இரண்டு சிறுமிகள் பலாத்காரம்

ஒடிஷா மாநிலம் புவனேஷ்வரம் பாட்டியா ரயில் நிலையத்தில் இரண்டு சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிஷா மாநிலம் புவனேஷ்வரம்  பாட்டியா ரயில்  நிலையத்திற்குச் சென்ற இரு சிறுமிகளை அப்பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறுகர்கள் கடத்தி, அவர்கள் இருவரையும் ரயில்வே மேம்பாலத்திற்கு அழைத்துச் சென்றனர்.

கயிற்றால் சிறுமிகளைக் கட்டிவைத்து, இரவு முழுவதும் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

பின்னர், காலையில், இரு சிறுமிகளை அவர்கள் விடுவித்த நிலையில், சிறுமிகள் அழுதபடியே வீட்டிற்கு வந்து, பெற்றோரிடம் அங்கு நடந்தத்தை கூறியுள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.