வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 23 ஜனவரி 2023 (14:15 IST)

மின்சாரம் இல்லாமல் நடுவழியில் நிற்கும் ரயில்கள்: பாகிஸ்தானின் அவல நிலை!

trains
பாகிஸ்தானில் மின்சாரம் இல்லாமல் பல நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளதாகவும் மின்சார ரயில்கள் நடுவழியில் நின்று இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
பாகிஸ்தான் நாடு கடும் பொருளாதார சிக்கலில் இருக்கிறது என்றும் இன்னும் ஒரு சில மாதங்களில் அந்நாடு திவாலாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. 
 
இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள பல நகரங்களில் மின்சார பற்றாக்குறை காரணமாக இருளில் மூழ்கியுள்ளதாகவும் பல நகரங்களில் மின்சாரம் இன்றி நடுவழியில் ரயில்கள் நின்று கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள மின்சார பிரச்சனையை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் எனினும் 12 மணி நேரத்திற்கு மேல் மின்வெட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 
 
குறிப்பாக இஸ்லாமாபாத், பெஷாவர், கராச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran