1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By abimukatheesh
Last Updated : சனி, 21 மே 2016 (17:39 IST)

தற்கொலையை தடுக்கும் மனநலப் பயிற்சிக்கு ரூ:15 லட்சம் ஒதுக்கீட்டு

சிறுவர்களுக்கு தற்கொலை எண்ணங்களை தடுக்க மாவட்டந்தோறும் மனநலப் பயிற்சி அளிக்க ரூ:15 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது என சமுகத்துறை தெரிவித்துள்ளது.


 
தமிழகத்தில் கடந்த ஆண்டு சமுகநலத் துறை, சிறுவர்களிடையே ஏற்படும் தற்கொலை எண்ணங்களை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தது.
 
இதுகுறித்து பயிற்சியில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் 3 மாதங்கள் வரை மனநல ஆலோசகர்கள் மூலம் ஆலோசனை வழங்கப்பட உள்ளது, என்றும், அதோடு மனச்சோர்வு, போதைப் பொருள் தடுப்பு, தற்கொலை முயற்சிகள் உள்ளிட்டவற்றுக்கு நிவாரணம் பெற மனநல நிபுணர்கள் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்றும் சமுகநலத் துறை அமைப்புகள் தெரிவித்துள்ளது.
 
இதையடுத்து இந்தக் கருத்துருவை அரசு ஆய்வு செய்து, முதல்கட்டமாக மாவட்டத்துக்கு ரூ. 47 ஆயிரம் வீதம் 32 மாவட்டங்களுக்கு ரூ. 15.04 லட்சம் ஓதுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.