திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (20:38 IST)

நடப்பு கல்வியாண்டில் தேர்வுக் கட்டணம் கிடையாது: சி.பி.எஸ்.சி அறிவிப்பு

கொரோனா வைரஸ் காரணமாக பெற்றோர்களை இழந்த பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டில் தேர்வு கட்டணம் கிடையாது என சிபிஎஸ்சி அதிரடியாக அறிவித்துள்ளது 
 
இந்த அறிவிப்புக்கு சிபிஎஸ்சி நிர்வாகத்திற்கு பலர் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல மாணவ மாணவிகள் தங்களுடைய பெற்றோர்களை இழந்து உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தங்களுடைய பங்காக சிபிஎஸ்சி நிர்வாகம் பெற்றோர்களை இழந்த மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் இல்லை என்ற சலுகையை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது