வெள்ளி, 31 மார்ச் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified ஞாயிறு, 19 மார்ச் 2023 (11:24 IST)

கர்ப்பமான 16 வயது சிறுமி; எரித்துக் கொன்ற காதலன்! – பீகாரில் அதிர்ச்சி!

பீகாரில் 16 வயது சிறுமியை காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு இளைஞர் ஒருவர் எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தில் உள்ள ரஜாவ்லி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் 16 வயது சிறுமி ஒருத்தியை காதலித்து வந்துள்ளார். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்த நிலையில் சமீபத்தில் சிறுமி கர்ப்பமாகியுள்ளார். அதற்கு பின் அந்த இளைஞர் சிறுமியை தவிர்க்க தொடங்கியுள்ளார். ஆனால் சிறுமி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு இளைஞரிடம் கேட்டு வந்துள்ளார்.

ஆனால் அதற்கு இளைஞரும், அவர் குடும்பமும் மறுத்துள்ளனர். இந்நிலையில்தான் சிறுமிக்கும், இளைஞருக்கும் இடையே வாக்குவாதம் வலுத்துள்ளது. சிறுமி தனக்கு இடையூறாக இருப்பார் என அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்த அந்த இளைஞர் காதலியை தீ வைத்து எரித்துக் கொன்றுள்ளார். இதை சிறுமியின் பெற்றோர் வெளியே சொல்லக்கூடாது என்று சிறுமியின் பெற்றோரையும் வீட்டு சிறையில் வைத்திருந்துள்ளனர் இளைஞரும், அவரது பெற்றோரும்.

எனினும் எப்படியோ தப்பி சென்ற சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து போலீஸில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் இளைஞர் மற்றும் அவரது பெற்றோர் உள்ளிட்ட 4 பேரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K