திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 6 ஏப்ரல் 2020 (18:51 IST)

போலீஸார் தாக்கியதில் இறைச்சி கடைக்காரர் பலி !

மதுரையில், இன்று  மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு அரசு விதித்துள்ள தடையை விதியை மீறி இறைச்சிக் கடையை  அப்துல் ரஹீம் (70)என்பவர் திறந்துள்ளார்.

அப்போது அந்த வழியே வந்த காவல்துறையினர் கடையை மூடும்படி சொல்லியுள்ளனர். அப்போது, அப்துல் ரஹீமின் உறவினர், காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில், காவல்துறையினர் அவரை தாக்கியுள்ளனர்.  அப்போது இதைத் தடுக்கச் சென்ற அப்துல்ரஹீம் கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதில் காயமடைந்த அப்துலை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் ஏற்கனெவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  ரஹீமின்  உடலை கருப்பாயூரணி கடைவீதி சாலையில் வைத்து ஊர்மக்கள் போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து அறிந்த போலீஸார் , மக்களை சமாதானப்படுத்தி, சம்பந்தப்பட்ட போலீஸார் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததால் கூட்டம் கலைந்துசென்றது.