திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : வியாழன், 4 மே 2023 (14:09 IST)

என்னை கட்சியில் இருந்து நீக்க வைகோவுக்கு பயம்: மதிமுக அவைத்தலைவர் துரைசாமி

duraisamy
என்னை கட்சியில் இருந்து நீக்க வைகோவுக்கு பயம் என்றும் நான் அரசியல் அரசியலிலிருந்து விலகி பெரியார் அண்ணா பாதையில் பயணிக்க போகிறேன் என்றும் மதிமுக தலைவர் துரைசாமி தெரிவித்துள்ளார். 
 
மதிமுகவை திமுகவுடன் இணைக்க வேண்டும் என்று சமீபத்தில் அவை தலைவர் துரைசாமி பேசியது  பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் மதிமுக தணித்து தான் இயங்கும் என்றும் திமுகவுடன் இணைக்க வாய்ப்பே இல்லை என்றும் துரைச்சாமி கருத்துக்கு வைகோ பதில் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த செய்தியாளர்களை  சந்தித்த மதிமுக அவை தலைவர் துரைசாமி நான் பெரியார் அண்ணா பாதைக்கு செல்ல போகிறேன் என்றும் அரசியலில் இருந்து விலகப் போகிறேன் என்றும் தெரிவித்தார். 
 
மேலும் என் மீது நடவடிக்கை எடுக்க வைகோவுக்கு பயம் என்றும் அவரால் என் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் தெரிவித்தார். கடந்த 30 ஆண்டுகளாக மதிமுகவில் உள்ள இளைஞர்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என்றும் அதனால்தான் மதிமுகவை திமுகவுடன் இணைக்க வேண்டும் என்று  துரைசாமி தெரிவித்தார் 
 
Edited by ccccccccccccccccccccccccc