வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 2 ஜூன் 2023 (08:43 IST)

சென்னையில் இன்று 108 டிகிரி வெப்பம் பதிவாக வாய்ப்பு: வெதர்மேன் தகவல்..!

சென்னையில் கடந்த சில வாரங்களாக கோடை வெயில் கொளுத்தி வருகிறது என்பதும் அக்னி நட்சத்திரம் வெயில் நேரத்தில் கூட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்தாலும் சென்னையில் மட்டும் மழை பெய்யாததால் வெப்பத்தின் கொடுமையால் பொதுமக்கள் அவதியில் இருந்து வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம்.
 
இந்த நிலையில் கத்தரி வெயில் முடிந்தபோதிலும் சென்னையில் இன்று அதிகபட்சமாக 108 டிகிரி வரை வெப்பம் பதிவாக வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் 
 
சென்னை மட்டுமின்றி  திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு ராணிப்பேட்டை வேலூர் ஆகிய மாவட்டங்களிலும் இன்று அதிகபட்ச வெப்பநிலை பதிவாக வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார். எனவே பொதுமக்கள் இன்று தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
 
Edited by Siva