புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 13 ஜனவரி 2020 (11:28 IST)

போகி பண்டிகையில் பிளாஸ்டிக் எரிக்க தடை! – கண்காணிப்பில் காவல்துறை!

போகி பண்டிகையின் போது பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறையின் உதவியுடன் 15 பேர் கொண்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் தமிழகத்தில் பொங்கல் விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு முதல் நாளான போகி பண்டிகையின் போது வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரிப்பார்கள். தற்காலத்தில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ள சூழலில் பலர் போகி பண்டிகையின் போது பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதால் சுற்றுசூழல் மாசடைவதுடன், அதை சுவாசிக்கும் மக்களுக்கும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

இந்நிலையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி போகி அன்று பிளாஸ்டிக் வீட்டு உபயோக பொருட்கள், டயர் போன்ற பொருட்களை எரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி மேற்சொன்ன பொருட்களை எரித்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது.