தொடர்புடைய செய்திகள்
- காதல் மனைவியை கொடூரமாக வெட்டிய கணவன்…
- ”போலீஸ் மிரட்டியதால் தீக்குளித்தேன்!”- புழல் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்
- நீங்கள் போலீஸ் ஸ்டேஷன் சென்றிருக்கிறீர்களா ? மாணவரிடம் கேள்வி எழுப்பிய பிரதமர் மோடி
- விஷமிகள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை: அண்ணாசிலை காவிக்கொடி குறித்து துணை முதல்வர் ஓபிஎஸ்
- ரியா அப்ஸ்காண்ட்: சுஷாந்த் சிங் தற்கொலையில் தொடர்பா?
ஊரடங்கில் உல்லாச ஸ்பாட் ஆன மசாஜ் செண்டர்: பேக் கேட்டில் தெறித்து ஓடிய ஆண்கள்!!
கன்னியாகுமரியில் மாசஜ் செண்டர் ஒன்று ஊரடங்கில் பாலியல் தொழில் தளமாக மாறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி சர்வதேச சுற்றுலா ஸ்தலமாக விலங்குவதால் வெளிநாட்டினருக்கான மசாஜ் செண்டர்கள் அங்கு ஏராளமாக இருக்கும். தற்போது கொரோனா காரணமாக பல மாதங்களாக ஊரடங்கு அமலில் இருப்பதால் பெரும்பாலான மசாஜ் செண்டர்கள் மூடப்பட்டுள்ளது.
ஆனால், ’’பிளாக் மூன்” என்ற பெயரில் இயங்கி வரும் மசாஜ் செண்டர் மட்டும் அவ்வப்போது திறந்து இருப்பதாகவும் அங்கு பாலியல் தொழில் நடப்பதாகவும் போலீஸாருக்கு புகார் வந்துள்ளது. முதலில் இதை கண்டுக்கொள்ளாதா போலீஸார் மீண்டும் மீண்டும் புகார் வரவே அதிரடியாக சோதனை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது அந்த மசாஜ் செண்டரில் பாலியல் தொழில் நடப்பது உறுதியானது. இதையடுத்து அங்கிருந்த ஒரு பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சோதனையின் போது இரண்டு ஆண்கள் பின்வாசல் வழியாக தப்பியுள்ளனர். அவர்களை தேடும் பணியில் போலீஸார் ஈடுப்பட்டுள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
