1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Mask mandatory in Chennai

கட்டாய முகக்கவசம் - சென்னை மாநகராட்சி உத்தரவு!

சென்னை
சென்னையில் கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ள கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவு. 

 
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்த நிலையில் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளி பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த சில காலமாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன.
 
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகளில்  கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதேபோல அலுவலகங்களில் முழு நேரமும் முகக்கவசம் அணிய வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. 
 
இதனைத்தொடர்ந்து 10-க்கும் அதிகமானோர் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தற்போது சென்னையில் கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ள கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
 
வணிக நிறுவனங்கள் ஒரே நேரத்தில் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும், வணிக வளாகங்கள், தியேட்டர்கள், துணிக்கடைகளில் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மாஸ்க் அணிய வேண்டும் எனவும் சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
About Writer
Sugapriya Prakash