வெள்ளி, 31 மார்ச் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified புதன், 15 மார்ச் 2023 (10:09 IST)

ஆம்பூர் பேருந்து நிலையத்தில் தாலி கட்டிய இளைஞர்.. வலைவீசி தேடும் காவல்துறை..!

பரபரப்பாக இயங்கி வரும் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் இளம் பெண் ஒருவருக்கு வாலிபர் தாலி கட்டிய சம்பவத்தின் வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 
 
எந்நேரமும் பிசியாக இருக்கும் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் கழிவறை அருகே இளம் ஜோடி ஒன்று திருமணம் செய்து கொண்டனர். வாலிபர் ஒருவர் அவசர அவசரமாக தனது காதலிக்கு தாலி கட்டி விட்டு அதன் பின்னர் மாயமாக மறைந்து விட்டார்கள். 
 
இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் காவல்துறையினர் அந்த பகுதிக்கு சென்று திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி யார் என்பதை குறித்து விசாரணை செய்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 
 
ஆம்பூர் பேருந்து நிலையத்தில் கடந்த சில நாட்களாக காதல் ஜோடிகள் மற்றும் சமூக விரோதிகள் குற்ற நடவடிக்கைகள் ஈடுபொருவதாக கூறப்படும் நிலையில் தற்போது பேருந்து நிலையத்தில் தாலி கட்டி திருமணம் நடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.
 
Edited by Mahendran