ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 9 மார்ச் 2023 (19:24 IST)

தன் மனைவியை 2 வது முறையாக திருமணம் செய்த பிரபல நடிகர்

shukkur -sheena
கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நடிகர் சுக்கூர் தன் மனைவியை இரண்டாவது முறையாக திருமணம் செய்துகொண்டார்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நடிகர்  சி. சுக்கூர். இவர்,  நான் தான் கேஸ் கொடு என்ற படத்தில் வக்கீலாக நடித்து ரசிகர்களிடம் பிரபலம் ஆனார்.

இவரது மனைவி ஷீனா, மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தராகப் பணியாற்றியவர் ஆவார்.  இவர்களுக்கு ஏற்கனவே  கடந்த 1994 ஆம் ஆண்டு திருமணமாகி இந்த தம்பதியர்க்கு 3 மகள்கள் இருக்கும் நிலையில், 29 ஆண்டுகளுக்குப் பின், சுக்கூர் தன் மனைவியை நேற்று  சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் 2-வது முறையாகத் திருமணம் செய்துகொண்டார்.

இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த இவர்களின் திருமண நிகழ்ச்சியின்போது, அவர்களின் 3 மகள்கள் சாட்சியாகப் பங்கேற்றனர். இவர்கள் திருமணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கேரள மாநில சன்னி பிரிவு கல்வி மையம் இவர்களின் திருமணத்திற்கு கண்டனம் தெரிவித்து, முஸ்லிம் தனி நபர் சட்டங்கள் மற்றும் இஸ்லாம் அவமதிப்பு செய்யப்பட்டுள்ளதாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

 மேலும், தன் மரணத்திற்குப் பின் தன் சொத்துகள் தன் சகோதர்களுக்கு போககூடாது என்ற நோக்கில் சுக்கூர் செயல்பட்டுள்ளார் என விமர்சித்துள்ளது.ஆனால் இதைச் சுக்கூர் மறுத்துள்ளார்.