1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Dinesh
Last Modified: வியாழன், 8 செப்டம்பர் 2016 (18:44 IST)

இந்தியாவிற்கு திருமணம்!

தமிழகத்தை சேர்ந்த இளங்கோவன் ஒரு சமூக ஆர்வலர், தீவிர தேசியவாதி.  அவர் சமூக பிரச்சினைகளை மக்களிடத்தில் மேடை நாடகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்.
 

 


மேலும் அவர், தனது தேசப்பற்றை ஓவியங்கள் மூலமும் வெளிப்படுத்தி வந்தார். அவர் இந்திய தேசத்தின் மீது கொண்டுள்ள அளவற்ற பற்றின் காரணமாக அவருக்கு பிறந்த மகளுக்கு இந்தியா என்று பெயர் வைத்தார். இந்தியா, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி கணினி அறிவியல் படித்து பட்டம் பெற்றுள்ளார். தற்போது, 24 வயதாகும் இந்தியாவிற்கு, திருமணம் நடந்து முடிந்துள்ளது. ஸ்டாலின் என்பவரை அவர் திருமணம் செய்துக்கொண்டார். 
 
இந்நிலையில், இந்தியா கூறியதாவது, “என் பெயர் காரணம் குறித்து பலர் ஆர்வமுடன் என்னிடம் வந்து விசாரிப்பார்கள், சிலர் என் பெயரை கிண்டல் செய்வார்கள், சிலர் பாராட்டும் விதமாக நடந்துக்கொள்வார்கள். எதையும் நான் கண்டுக்கொள்வது கிடையாது.” என்றார்.
 
இந்தியாவிற்கும் தேசப்பற்று அதிகம். பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடக்கும் ஏராளமான போட்டிகளில், அவர் மகாகவி சுப்ரமணிய பாரதியின் பாடல்களை பாடி பரிசுகள் பெற்றுள்ளார்.