1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 28 டிசம்பர் 2023 (13:51 IST)

மார்கழியில்_மக்களிசை_2023 இன்றைய நிகழ்ச்சி ஒத்திவைப்பு- பா.ரஞ்சித்

vijaykanath -margazhi makkalisai
தமிழ் சினிமாவின் பிரபல  நடிகரும், தேமுதிக  நிறுவனருமான விஜயகாந்த் இன்று உடல் நலக்குறைவால் காலமானார்.

அவரது மறைவுக்கு சினிமாத்துறையினர், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் கூறி வருகின்றனர்.

இன்று காலை 6.10 மணிக்கு விஜயகாந்த் மறைந்த நிலையில், சென்னை கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் நாளை ( டிசம்பர் 29) மாலை 4.45 மணிக்கு அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

இன்றும் நாளையும் கட்சி தலைமை அலுவலகத்தில்  விஜயகாந்த் உடலுக்கு பொதுமக்கள் மரியாதை செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ’’ அன்புச் சகோதரர் திரு. விஜயகாந்த் அவர்களை இழந்து வாடும் அவரது மனைவி அன்புச் சகோதரி திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்திற்கும், திரைப்பட ரசிகர்களுக்கும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்பியுமான ராகுல்காந்தி,  ''தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவு செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன். சினிமா மற்றும் அரசியலில் அவர் செய்த பங்களிப்பின் மூலமாக லட்சக்கணக்கான மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர்.அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்'' என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில்,  மார்கழியில்_மக்களிசை_2023  நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் பா. ரஞ்சித் தன் வலைதள பக்கத்தில்,

''திரைத்துறையிலும், அரசியலிலும் முக்கிய பங்காற்றி தவிர்க்க முடியாத ஆளுமையாக வாழ்ந்து மறைந்த தேமுதிக இயக்கத்தின் தலைவர் விஜயகாந்த் அவர்களின் மறைவையொட்டி சென்னையில் நடக்கவிருந்த #மார்கழியில்_மக்களிசை_2023 இன்றைய நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுகிறது.

விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்’’ என்று   தெரிவித்துள்ளார்.