மாறன் சகோதரர்கள் விடுதலையை எதிர்த்து மேல் முறையீடு!
தயாநிதி மாறன் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த போது, சட்டவிரோத பிஎஸ்என்எல் எக்சேஞ்ச் வழக்கில் கலாநிதி மாறன் மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது.
தயாநிதி மாறன் 2004-2007 ஆம் ஆண்டுகளில் சட்டவிரோத அதிவேக உயர் இணைப்புகள் கொண்ட டெலிபோன் எக்சேஞ்ச் ஒன்றை நடத்தி அரசுக்கு இழப்பை ஏற்படுத்தினார். அதோடு இந்த இணைப்புகளை கலாநிதி மாறனின் சன் டிவிக்கு பயன்படுத்தியதாகவும் ரூ1.78 கோடி அரசுக்கு இழப்பு என்றும் சிபிஐ குற்றம்சாட்டியது.
இந்த வழக்கு விசாரணையின் முடிவில் மாறன் சகோதர்கள் கடந்த மார்ச் மாதம் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில், இவர்களது விடுதலை தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்துள்ளது. இதனால், மீண்டும் இந்த வழக்கு உயிர்பெருவதால், மாறன் சகோதரர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.