புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 20 ஜனவரி 2021 (11:45 IST)

கமலா ஹாரிஸ் காலண்டர், பேனர்கள்! – அட்டகாசம் செய்யும் மன்னார்குடி மக்கள்!

அமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ் இன்று பதவியேற்கும் நிலையில் அவர் படம் அச்சடித்த காலண்டர்களை அளித்து இதை கொண்டாடி வருகின்றனர் துளசேந்திரபுரத்து மக்கள்

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த நவம்பரில் நடந்து முடிந்த நிலையில் அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பிடன் இன்று பதவியேற்கிறார். அதேசமயம் இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸும் இன்று துணை அதிபராக பதவி ஏற்க உள்ளார்.

கமலா ஹாரிஸின் தாத்தா கோபாலன் தமிழகத்தில் உள்ள மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமத்தை சேர்ந்தவர். அதனால் அமெரிக்க தேர்தல் தொடங்கிய சமயமே கமலா ஹாரிஸ் வெற்றிபெற வேண்டும் என அக்கிராம மக்கள் சிறப்பு பூஜைகள் எல்லாம் செய்தனர்

இந்நிலையில் இன்று கமலா ஹாரிஸ் பதவியேற்க உள்ள நிலையில் அவர் மட்டும் ஜோ பிடன் படங்கள் உள்ள காலண்டர்கள் விநியோகிப்பது, கமலா ஹாரிஸுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து பேனர்கள் அடிப்பது என அவரது வெற்றியை துளசேந்திரபுர மக்கள் கொண்டாடி வருகின்றனர்.