1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 11 ஜனவரி 2022 (18:19 IST)

மதுரை மக்களை கவர்ந்த மஞ்சள் பை பரோட்டா: புகைப்படம் வைரல்

மதுரை மக்களை கவர்ந்த மஞ்சள் பை பரோட்டா: புகைப்படம் வைரல்
மதுரை என்றாலே புரோட்டாவுக்கு புகழ்பெற்ற நகரம் என்பதும் தூங்கா நகரத்தில் எந்த நேரத்தில் போய் கேட்டாலும் கடைகளில் புரோட்டா இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பின் போது மாஸ்க் வடிவில் புரோட்டா செய்து புரோட்டா மாஸ்டர்கள் அசத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த ஆண்டு மஞ்சப்பை அனைவரின் மத்தியிலும் கவர்ந்த நிலையில் மஞ்சப்பை வடிவில் புரோட்டாவை மதுரை ஹோட்டல் ஒன்றில் செய்துள்ளனர்.

மதுரை மக்களுக்கு மஞ்சப்பை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த மஞ்சப்பை பரோட்டா வாடிக்கையாளர்களுக்கு வந்து கொண்டிருப்பதாகவும் ஹோட்டலில் பார்சல் வாங்கி வருபவர்களுக்கும் புரோட்டா உடன் இலவசமாக மஞ்சப்பை வழங்கப்பட்டு வருவதாகவும் ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்