செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 4 டிசம்பர் 2019 (08:45 IST)

கல்லாப்பெட்டியில் அமர்ந்து திருடிய பணத்தை எண்ணிய நபர் – சிசிடிவியில் சிக்கிய சம்பவம் !

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கம்ப்யூட்டர் கடை ஒன்றுக்குள் புகுந்து  திருடிய நபர் கல்லாவில் உட்கார்ந்து பொறுமையாகப் பணத்தை எண்ணிப்பார்த்து எடுத்துச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முன் தினம் இரவு கம்ப்யூட்டர் கடை ஒன்றுக்குள் புகுந்த இளைஞன் ஒருவர் லேப்டாப் மற்றும் பணத்தைத் திருடிச் சென்றுள்ளார். இது சம்மந்தமாக அந்த கடையின் உரிமையாளர் காவல்துறையில் புகாரளித்துள்ளனர்.

கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளைப் போலிஸார் ஆராய அதில் கையில் டார்ச் லைட்டோடு வரும் அந்த இளைஞன் எந்தவிதமான பதற்றமும் இல்லாமல் லேப்டாப் உள்ளிட்டவற்றைத் திருடுகிறார். பின்னர் கல்லாப்பெட்டியில் அமர்ந்து இருக்கும் பணத்தை பொறுமையாக எண்ணிப்பார்த்து எடுத்துக் கொண்டு செல்கிறார். இந்த சம்பவமானது அந்தப்பகுதியில் பீதியைக் கிளப்பியுள்ளது. வீடியோக் காட்சிகளில் உள்ள புகைப்படத்தை வைத்து அந்த நபரைத் தேடி வருகின்றனர்.